Collection of 32 Best Pengal Kavithai in Tamil and Images many more caption in Tamiil language Read and also share with your friends and family on Instagram, Facebook, and WhatsApp.
Pengal Kavithai in Tamil
மிகவும் மெல்லிய குரலில் ஆதங்கத்துடன்
“என்னை விட அவ என்ன அவ்ளோ அழகா?”
என்னிடம் முறையிட்ட நிலா.
ஒரு பெண் தன் பிள்ளையை பெறுவதற்கு
முன்பே தாய் தான். கணவனை உயிராய் சுமப்பதனால்.

பெண்களுக்கு வீரமான
ஆண்களை விட.. அன்பான
ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!
ஆயிரம் பேர் எதிர்த்து நின்று நம்மீது
பழி சொன்னாலும் தவறு நம் மீதே
இருந்தாலும் நம்மை
விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை
போராடும் உறவுக்கு பெயர்தான்
மனைவி..!
ஆண் என்ற அகங்காரம்
கொள்வதற்கு முன்னாள் யோசி.
முதலில் உன்னை ஒரு பெண்
பத்து மாதம் சுமந்து பெற்றாலே நீ ஒரு “ஆண் மகன்”.

பெண்கள் கவிதை வரிகள்
பெண்கள் ரோஜா செடி
போன்றவர்கள்.. கல்லும் இருக்கும்..
மண்ணும் இருக்கும்..
முள்ளும் இருக்கும்..
கல் கலையாவதும்..
மண் மணமாவதும்..
முள் முளையாவதும்.. பெண்களின்
கைகளிலே தான் உள்ளது..!
பெண்ணடிமை பேணிய விஷவித்தகர்கள்
வீழ்ந்தொழிந்தனர் என
பாருலகை ஆளவந்த பெண்களுக்கு
புத்துணர்ச்சி தருவோம்..
தன்னை விட தனது வாழ்க்கை
துணைக்கு அறிவும் திறமையும்
அதிகம் என்று தெரிந்த பின்..
பெண் சந்தோசம் கொள்கிறாள்..
ஆண் சந்தேகம் கொள்கிறான்..

பெண் ஒரு அழகிய இசைக்கருவி
இரைச்சல் வருகிறதே என்று
குறை சொல்வது முட்டாள்தனம்..
இசைக்க தெரியவில்லை என்பதை
ஒத்துக் கொள்ளுங்கள்..!
ஆணின் அன்பை உணராது எந்த
பெண்ணும் சந்தோஷமாக வாழ்ந்தது
இல்லை.. பெண்ணின் உணர்வுகளை
புரிந்து கொள்ளாமல் ஆண்கள்
இவ்வுலகில் எதையும்
சாதித்தது இல்லை..!
பூக்களின் கனிவான கவனத்திற்கு! மாலை
நேரமாகிவிட்டது மலர் தொடுக்க அவள் வருகிறாள்
ஒப்பனை செய்து தயாராகுங்கள்!

Pengal Kavithaigal
கோபத்தில் முறைத்தாலும் அழகு, மகிழ்ச்சியில்
சிரித்தாலும் அழகு! அவள் பேசும் மொழியும் அழகு,
மொழி தமிழானதால் தமிழும் அழகு!
யார் மீது கோபம் வந்தாலும்
அதை பிடித்தவர்கள் மீது காட்டுவதே
பெண்களின் குணம்..!
ஒரு பெண் காதல் வயப்படும் வரை
வேண்டுமானால் காதலனை
காயப்படுத்திருக்கலாம்.
ஆனால் தன் காதலை காப்பாற்றிக்கொள்ள
பெண் தான் கடைசிவரை போராட
வேண்டியிருக்கிறது.

ஆயிரம் பேர் எதிர்த்து நின்று நம்மீது
பழி சொன்னாலும் தவறு நம் மீதே
இருந்தாலும் நம்மை
விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை
போராடும் உறவுக்கு பெயர்தான்
மனைவி..!
கோபத்தில் முகத்தை திருப்பிக்
கொண்டு சமாதானத்திற்காக
ஏங்கும் குழந்தையாகிறாள் பெண்..
பிடித்தவர்களிடம் மட்டும்..!
அத்தனை அழகையும் ஒன்றாக்கிய ஒரு சிரிப்பு! அது,
அவளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தான் தனிச்சிறப்பு!
இருட்டில் பூத்த பூவே.. உன்னழகைப்
பார்த்து ரசிக்கக் கண் கோடி வேண்டுமே!

பெண் கவிதை
பெண்களின் மனதை அறியும் நூல்
எந்த நூலகத்திலும் இல்லை அவளை
காதலித்தவனை தவிர..!
ஆயிரம் கோடி தங்க நகைகளை
அணிந்தாலும் ஒரு பெண்ணிற்கு..
ஒற்றை மஞ்சள் கயிறு கொடுக்கும்
மரியாதையை கொடுத்துவிட
முடியாது..!
தனக்கு பிடித்த பெண்ணிடம் எப்போதும்
மனம் விட்டு பேச நினைப்பது தான்
ஆண்கள் குணம். தனக்கு பிடித்த
ஆணிடம் தினமும் மனதோடு பேச
விருப்பப்படுபவது தான் பெண்ணின் குணம்

அழகென்றும்.. அறிவென்றும்..
கறுப்பென்றும்.. சிகப்பென்றும்..
அடையாளம் எத்தனை..?
அனைத்திலும் சிறப்பு பெண்மை..!
தேவதைகளும் தேடிச்சென்று பார்ப்பார்கள்,
தாவணியுடன் என் தேவதை தெருவீதியில் வரும் வேளையில்!
தேவதை எப்படி இருப்பாள் என கேட்பவர்களுக்கு,
உன்னைத் தான் அடையாளமாக காட்டி வைத்திருக்கிறேன்!

பெண்கள் கவிதைகள்
பெண்தானே என்று
தாழ்வாக நினைக்காதே..
அவள் அங்கீகரிக்காவிட்டால்
உன்னை ஆண்மகன் என்று
உலகம் ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளாது..!
உயிரை பெற்று எடுக்கும்
பலத்தையே பெண்களுக்கு
கொடுத்த இறைவன்.. அழுகையை
பலவீனமாக கொடுத்து
அடிமையாக்கி விட்டான்..!
வாழ்க்கை ஒரு வானவில்
ஆக இருந்தால் அதில் நீ ஒரு வர்ணம்!
வாழ்க்கை ஒரு இருட்டாக இருந்தால் அதில் நீ வெளிச்சம்!

உன் வீட்டு வாசலை அலங்கரிக்க கோலங்கள் எதற்கு?
வாசலில் உன் பாதத்தை வை… அதுவே, ஆகச்சிறந்த கோலம் தான்!
வெட்கத்தை தாண்டிய அவளின்
புன்னகை விலை மதிப்பற்றது தான்!
நாள் முழுவதும் சக்கரம் போல் ஓயாமல்
சுழன்று வேலை செய்து வரும் பெண்கள்
அனைவருமே போற்றப்பட வேண்டிய
நடமாடும் தெய்வம் தான்.
நிலவில் அனலும், மலரில் வன்மையும் உண்டென்று
உனைக் காணும் வரை எனக்குத் தெரியாது!
இப்பூமியில் பிறக்கும் போதே பெண்கள் புரட்சியாளராகவே பிறக்கிறார்கள்..
பெண்களுக்கு இரு மனம் ஒன்று பூக்கடை மற்றொன்று
சாக்கடை எனச்சொல்வதைக் கேட்டிருப்போம் ஆனால்
இன்று பெண்கள் பிறக்கும் போதே சாதனை, சரித்திரம்
படைக்கவும் பூவும் புயல் வீசும் எனக்காட்டவும் விதையிட்ட
இடத்திலே விருட்சமாகவும் விளக்கொளியில் மடியும் விட்டில்
பூச்சிகளாக இல்லாமல் விடியலைத்தேடும் வின்மீன்களாகவுமே பிறக்கிறார்கள்..
If you loved these quotes and you’re looking for additional Pengal Kavithai in Tamil related quotes. Make sure to check out our other post Tamil Kadhal Kavithaigal and please comment below if you like our post.